கடலூரில் கோழிகள் உயிரிழப்பு: பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

கடலூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து கோழிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், பறவை காய்ச்சல் (H5N1) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டியங்குப்பம் மற்றும் கிருஷ்ணகுப்பம் ஆகிய கிராமங்களில் கோழிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இந்த நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதையடுத்து, நோய் மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.




கருத்துகள் (0)