ஞாயிறு, நவம்பர் 15, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்புகளை உருவாக்குவோம் – முதல்வர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்து!

குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்புகளை உருவாக்குவோம் – முதல்வர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்து!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் விஜய், மாநிலம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒவ்வொரு குழந்தையிடமும் தனித்துவமான திறமைகளும் ஆற்றல்களும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சிந்தனைகளுக்கு ஏற்ப, குழந்தைகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை முழுமையாக வெளிப்படுத்துவதற்குத் தேவையான வாய்ப்புகளையும் உரிய களங்களையும் உருவாக்கித் தர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் கனவுகளுக்கு சிறகுகள் கொடுத்து, அவர்கள் தங்களது இலக்குகளை அடைந்து வெற்றிப் பாதையில் பயணிக்க ஊக்கமளிப்போம் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் வளமான தமிழ்நாட்டையும், திறமைகள் நிறைந்த வலிமையான இந்தியாவையும் உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என முதல்வர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.