காவல் ஆய்வாளரை கொலை செய்ய முயன்ற வழக்கறிஞருக்கு 10 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர் சீனிவாச பிரசாத் என்பவர், காவல் ஆய்வாளரைத் தாக்கி கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி காவல் ஆய்வாளர் பீட்டர் பால்துரையை வழக்கறிஞர் சீனிவாச பிரசாத் தாக்கியதாகவும், அவரைக் கொலை செய்ய முயன்றதாகவும் புகார் எழுந்தது. மேலும், காவல் ஆய்வாளர் தனது அரசு பணியைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த வள்ளியூர் உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி சி.அசோக்குமார், வழக்கறிஞர் சீனிவாச பிரசாத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன், மொத்தம் ரூ.12,000 அபராதமும் செலுத்த உத்தரவிட்டார்.




கருத்துகள் (0)