வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

விருதுநகர் அருகே கடன் நெருக்கடியால் விபரீத முடிவு: 10 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை!

விருதுநகர் அருகே கடன் நெருக்கடியால் விபரீத முடிவு: 10 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை!

 

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி (30). இவர் நேற்று மாலை சூலக்கரை ரயில்வே கேட் அருகே தனது 10 வயது மகன் பிரதீப்புடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த அம்ரித் பாரத் விரைவு ரயில் முன் இருவரும் பாய்ந்ததில், தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், பாண்டிச்செல்வியின் கணவர் வெங்காய வியாபாரத்திற்காக கடன் வாங்கியிருந்ததாகவும், அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தக் கோரி வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கடன் நெருக்கடியால் ஏற்பட்ட மன உளைச்சலே பாண்டிச்செல்வியின் விபரீத முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடன் பிரச்சினையால் ஒரு குடும்பத்தில் தாய், மகன் என இரு உயிர்கள் பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.