கவின் கொலை வழக்கு: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

தூத்துக்குடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. கவின் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இந்த மேல்முறையீடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வரும்போது, குற்றப்பத்திரிக்கை ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியவரும்.




கருத்துகள் (0)