வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்ம மரணம்; 9 சவரன் நகை மாயம் – விருதுநகரில் பரபரப்பு!

விருதுநகரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவர், வாயில் ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அணிந்திருந்த 9 சவரன் தங்கச் சங்கிலியும் காணாமல் போயிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதையடுத்து, தங்க நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, மூதாட்டியின் மரணத்துக்கான காரணம் மற்றும் நகை மாயமானது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.




கருத்துகள் (0)