“பெண் குழந்தைகளின் சிரிப்பே குடும்பத்தின் மகிழ்ச்சி!” – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், பெண் குழந்தைகள் இந்தப் பூமியின் மிக அழகான கவிதைகள் என்றும், அவர்களின் மழலைச் சிரிப்பு குடும்பத்தின் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை, தரமான கல்வி, பாதுகாப்பான சூழல், சம உரிமை மற்றும் முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்வது அனைவரின் கடமையும் பொறுப்புமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றும், பாகுபாடற்ற சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.




கருத்துகள் (0)