திருமண வாக்குறுதி அளித்து நெருக்கமாக இருந்ததாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் திமுக நிர்வாகி மீது பேராசிரியை புகார்!

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை ஒருவர், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னுடன் நெருக்கமாக இருந்துவிட்டு தற்போது கொலை மிரட்டல் விடுப்பதாக மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஆஷிக் (எ) அஸ்ஹத் பாஷா மீது புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் திமுக நிர்வாகி என அறிமுகமான ஆஷிக், முதலில் சமூக வலைதளத்தில் பேசி வந்ததாகவும், பின்னர் வற்புறுத்தி தனது செல்போன் எண்ணைப் பெற்றுக்கொண்டதாகவும் பேராசிரியை புகாரில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 2025 செப்டம்பர் 19-ஆம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வந்த ஆஷிக், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னுடன் நெருக்கமாக இருந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதுடன், வயதை குறிப்பிட்டு அவமதிக்கும் வகையில் பேசுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கடந்த நவம்பர் 17-ஆம் தேதி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)