வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி – சென்னையில் சோகம்!

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி – சென்னையில் சோகம்!

சென்னை மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியின்போது தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஹரி (25) என்ற இளைஞர் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் அந்தச் சாலை வழியாகச் சென்றுள்ளார். அப்போது போதிய வெளிச்சம் இல்லாததால், சாலையில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தை கவனிக்க முடியாமல் பைக்குடன் அதற்குள் தவறி விழுந்துள்ளார். பள்ளத்தில் இருந்த கட்டுமானப் பணிகளுக்கான இரும்புக் கம்பிகள் அவரது உடலில் குத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

பணிகள் நடைபெறும் பகுதியில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தடுப்புகள் அமைக்கப்படவில்லை என்றும், விபத்து ஏற்படாமல் எச்சரிக்கும் பலகைகளும் வைக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் இத்தகைய உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம் என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.