மலைப்பகுதி பள்ளி மாணவர்களுக்கு இலவச ரெயின் கோட், ஸ்வெட்டர்! தமிழக அரசு புதிய திட்டம்!

தமிழகத்தில் மலைப்பகுதிகளில் வசிக்கும் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் 2027-2028 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக ரெயின் கோட் மற்றும் கம்பளி ஸ்வெட்டர்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடாக 91,771 ரெயின் கோட்டுகள் மற்றும் 92,062 கம்பளி ஸ்வெட்டர்களைக் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.5.7 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக காலணிகள் மற்றும் சாக்ஸ் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ரூ.46 கோடி மதிப்பில் தனியாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2027-2028 கல்வியாண்டில் இத்திட்டங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.




கருத்துகள் (0)