மனைவி, காதலன் மற்றும் நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

ஹரியானா மாநிலம் ரேவாரியில், கடந்த 2019ஆம் ஆண்டு நீதிமன்ற எழுத்தர் சுரேந்திர குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த கொலை வழக்கில் சுரேந்திர குமாரின் மனைவி சீமா யாதவ், அவரது காதலன் அனில் மற்றும் நண்பர் மனிஷ் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொருவருக்கும் ரூ.60,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆரம்பத்தில் கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொள்ளை முயற்சியின்போது நடந்ததாக சீமா யாதவ் தெரிவித்திருந்தார். ஆனால், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கள்ளத்தொடர்பு காரணமாக திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.




கருத்துகள் (0)