மணப்பாறை அருகே கோர விபத்து! கார் நிலைதடுமாறி சாலையோரம் பாய்ந்ததில் பள்ளி சிறுவன் பலி – 3 பேர் படுகாயம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் புகுந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை அருகே சென்று கொண்டிருந்த கார் திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பள்ளி சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வையம்பட்டி போலீசார், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பள்ளி சிறுவன் உயிரிழந்த இந்தச் சாலை விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
\#Trichy #Manapparai #RoadAccident #TamilNaduNews #fblifestyle




கருத்துகள் (0)