மணப்பாறை அருகே மீன் கடைக்குள் புகுந்த கார்: 16 வயது மாணவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், மீன் கடை நடத்தி வந்த 16 வயது பள்ளி மாணவர் உயிரிழந்தார். தூத்துக்குடியில் இருந்து சென்னையை நோக்கி அதிவேகமாகச் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மீன் கடைக்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கடையில் இருந்த 10-ம் வகுப்பு மாணவர் ஜான்சன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் ஜான்சன் உயிரிழந்தார். அப்போது மீன் வாங்குவதற்காகக் கடைக்கு வந்திருந்த மூன்று பேரும் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை வையம்பட்டி போலீசார் கைது செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)