உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் பெரியார் பல்கலைக்கழகத்தின் 6 பேராசிரியர்கள்!

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆறு பேராசிரியர்கள் இடம்பிடித்துள்ளனர். உலகளவில் பல்வேறு துறைகளில் சிறப்பான ஆராய்ச்சிப் பங்களிப்புகளை வழங்கும் விஞ்ஞானிகளை அடையாளம் காணும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது பல்கலைக்கழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.
இதில் பேராசிரியர்கள் ராஜ், ராம்குமார், பிரகாஷ் மாறன், ரமேஷ், பழனிவேல் மற்றும் மறைந்த பேராசிரியர் வெங்கடாசலம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆராய்ச்சித் துறையில் இவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சாதனை, பெரியார் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.




கருத்துகள் (0)