வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலா? டிஎஸ்பி மீது ஆளுநரிடம் புகார்!

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலா? டிஎஸ்பி மீது ஆளுநரிடம் புகார்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி. இவர் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி, தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

இதுதொடர்பாக கடந்த அக்டோபர் 16ஆம் தேதி டிஎஸ்பி கலையரசனை நேரில் சந்தித்து அன்னலட்சுமி முறையிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது டிஎஸ்பி தன்னிடம் ஆபாசமாகப் பேசியதுடன், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இந்த விவகாரம் தொடர்பாக டிஎஸ்பி கலையரசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அன்னலட்சுமி தற்போது ஆளுநர், முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றிடம் புகார் மனுக்களை அளித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.