பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையா? முதல்வர் விஜய் ஆலோசனை!

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பண்டிகை தினங்கள் மட்டுமின்றி அதற்கு முந்தைய நாட்களிலும் மதுபானக் கடைகளை மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பண்டிகை காலங்களில் மது அருந்துவதால் ஏற்படக்கூடிய சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளின் செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், எந்தெந்த நாட்களில் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து மதுப்பிரியர்கள் காத்திருக்கின்றனர்.




கருத்துகள் (0)