வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
இந்தியா

டெல்லியில் 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் முயற்சி பொதுமக்களிடம் சிக்கிய நபர் கைது!

டெல்லியில் 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் முயற்சி பொதுமக்களிடம் சிக்கிய நபர் கைது!

டெல்லியின் வடமேற்குப் பகுதியில் உள்ள பாரத் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூங்காவில், 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த நவம்பர் 24-ஆம் தேதி காலை 11.30 மணியளவில், சிறுமி தனது தாய்மாமன் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது இஸ்மாயில் கான் வாலா பாக் பூங்காவில் சிறிது நேரம் நின்றுள்ளார். அப்போது அங்கு இருந்த தச்சுத் தொழிலாளி ராஜேஷ் குமார் என்ற ராஜேஷ் குமார் சர்மா, சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படுகிறது.

 

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதும் பூங்கா காவலாளி மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். தப்ப முயன்ற நபரைப் பிடித்து தாக்கிய பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தீப் சந்த் பந்து மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட நபர் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.