மேற்குவங்க முன்னாள் அமைச்சர் உஜ்ஜல் பிஸ்வாஸ் காலமானார் – 72 வயதில் உயிரிழப்பு!

மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான உஜ்ஜல் பிஸ்வாஸ், தனது 72-வது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவு அரசியல் வட்டாரத்திலும், கட்சியினரிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு மூளையில் பக்கவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த மூன்று வாரங்களாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று அவர் உயிரிழந்தார்.
உஜ்ஜல் பிஸ்வாஸின் மறைவுச் செய்தி அறிந்த மேற்குவங்க முன்னாள் முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.




கருத்துகள் (0)