மெட்ரோ ரயில் திட்டம் குறித்து இபிஎஸ் அறிக்கை: தவெக கடும் விமர்சனம்!

அதிமுக ஆட்சியின் முயற்சியால்தான் தமிழகத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் வந்ததாகக் கூறி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது X தளப் பக்கத்தில் இபிஎஸை விமர்சித்துள்ளது.
இடைத்தேர்தலில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் சொந்தக் கட்சித் தொண்டர்களிடமே தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ள தவெக, விரக்தி மற்றும் பொறாமையின் காரணமாகவே அவர் இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளதாக விமர்சித்துள்ளது. மேலும், இபிஎஸ் அரசியல் ரீதியாகப் பின்னடைவைச் சந்திப்பார் என்ற தொனியிலும் கருத்துத் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தின் பெருமை யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக அதிமுக மற்றும் தவெக இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.




கருத்துகள் (0)