திங்கள், அக்டோபர் 19, 2026
உண்மையின் குரல்
அரசியல்

முதலமைச்சரை அவமதித்துப் பேசியதாக திமுகவுக்கு அமைச்சர் கீர்த்தனா கண்டனம்!

முதலமைச்சரை அவமதித்துப் பேசியதாக திமுகவுக்கு அமைச்சர் கீர்த்தனா கண்டனம்!

 

 

திமுக மேடையில் முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் பேச்சு இடம்பெற்றதாகக் கூறி, அமைச்சர் கீர்த்தனா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

 

மேலும், இந்தப் பேச்சு கனிமொழி எம்.பி. மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட பேச்சுக்கு அவர்கள் கண்டனம் தெரிவிப்பார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர்கள் மௌனம் காப்பது ஏன் என்றும் விமர்சித்துள்ளார். அமைச்சர் கீர்த்தனாவின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.