சனி, அக்டோபர் 17, 2026
உண்மையின் குரல்
அரசியல்

“முதல்வர் சொல்வதை விடுத்து போதைப்பொருள் கடத்துகிறார்களா?” – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

“முதல்வர் சொல்வதை விடுத்து போதைப்பொருள் கடத்துகிறார்களா?” – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

 

 

“முதலமைச்சர் ‘Drugs-ஐ விடு, Sports-ஐ எடு’ என்று மாரத்தான் ஓடுகிறார். ஆனால், அவரது கட்சியினர் ‘CM சொல்வதை விடு, Drugs-ஐ எடு’ என்று செயல்படுகிறார்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும், கட்சியினரே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதுதான் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி பூபாலனிடம் இருந்து பல லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிட்ட உதயநிதி, ஆளுங்கட்சியில் செல்வாக்கு மிக்கவர்களுக்குப் பங்கு கொடுப்பதால் கடத்தலில் ஈடுபடத் துணிகிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்தக் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.