புதன், நவம்பர் 25, 2026
உண்மையின் குரல்
அரசியல்

செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பு வாதங்களையும் நீதிமன்றம் கட்டாயம் கேட்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். அவரது தரப்பில் முன்வைக்கப்படும் விளக்கங்களைக் கேட்காமல் முன்கூட்டியே குற்றவாளி என முடிவு செய்யக்கூடாது என்றும் நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், வழக்கு தொடர்வதிலும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் நிதானம் அவசியம் என குறிப்பிட்ட தலைமை நீதிபதி, செந்தில் பாலாஜியின் தரப்பு வாதத்தை கேட்காமல் விசாரணையை முன்னெடுக்கக் கூடாது என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை தற்போது வேகமடைந்துள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.