நாமக்கல்லில் 10,000 வேகவைத்த முட்டைகள் இலவச விநியோகம்!

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு 10,000 வேகவைத்த முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன. முட்டையின் புரதச்சத்து மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இதற்கிடையே மக்காச்சோளம் உள்ளிட்ட தீவனப் பொருட்களின் கடுமையான விலை உயர்வால் கோழிப்பண்ணைத் தொழில் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருவதாகப் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர். திரளான பொதுமக்கள் இதில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.




கருத்துகள் (0)