சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

அரிசி, சர்க்கரை விலை உயரவில்லை: அமைச்சர் வெங்கடரமணன்!

அரிசி, சர்க்கரை விலை உயரவில்லை: அமைச்சர் வெங்கடரமணன்!

தமிழகத்தில் அரிசி மற்றும் சர்க்கரையின் விலைகள் உயரவில்லை என்றும், அவை சராசரி நிலையிலேயே நீடிப்பதாகவும் உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். இது குறித்து தாம் தினமும் நேரில் ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்ட அவர், உணவு பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் தேர்தல் அரசியலுக்காக பரப்பப்படும் வதந்திகளே என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், அத்தியாவசிய பொருட்களின் இருப்பு போதுமான அளவில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.