வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
அரசியல்

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் சந்திக்கத் தயார்! அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் சந்திக்கத் தயார்! அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!

தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், முதலமைச்சருடனான ஆலோசனையின்போது எம்எல்ஏக்களிடம் கடிதங்கள் பெறப்பட்டதாகக் கூறப்படும் தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், முதலமைச்சருடனான ஆலோசனையில் எம்எல்ஏக்களிடம் இருந்து எந்தக் கடிதமும் பெறப்படவில்லை என்று விளக்கம் அளித்தார்.

 

மேலும், எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர விரும்பினால் அதையும் சந்திக்க அரசு தயாராக இருப்பதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

 

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சரின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.