வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: நவம்பர் 14 முதல் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 12ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால் நவம்பர் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, கடலில் வானிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நவம்பர் 14 முதல் 20ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நவம்பர் 13ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




கருத்துகள் (0)