“ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு வாங்குவதுதான் தவெகவின் மாற்று அரசியலா?” – கனிமொழி கேள்வி!

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமல், காற்று வீசவில்லை, மழை பெய்யவில்லை என அரசு காரணங்களைக் கூறுவதாக திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தவெக அரசின் மெத்தனமான செயல்பாடுகளால் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார். அதிக விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதால் அரசின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்ட அவர், “கொள்ளை விலையில் மின்சாரம் வாங்கி கடனை அதிகரிப்பதுதான் தவெகவின் மாற்று அரசியலா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.




கருத்துகள் (0)