திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
அரசியல்

மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அமைச்சருடன் ஆலோசனை!

மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அமைச்சருடன் ஆலோசனை!

அமைச்சர் ஆனந்தை, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் என்.சுனில் ஆனந்த் மற்றும் மாவட்டச் செயலாளர் வி.ராஜ்குமார் ஆகியோர் இன்று (நவ.23) நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

 

இந்தச் சந்திப்பின்போது மேட்டுப்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய புதிய வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இரு தொகுதிகளிலும் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, புதிய திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

 

மேலும், பொதுமக்களின் அன்றாட தேவைகளான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, நிலுவையில் உள்ள வளர்ச்சிப் பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்பில் தொகுதிகளின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.