செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
ஆன்மிகம்

கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்கேற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்கேற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

கார்த்திகை தீபத் திருநாளில் வீடுகளில் விளக்கேற்றி வழிபடும்போது, அகல் விளக்குகளை நன்றாகச் சுத்தம் செய்து பயன்படுத்துவது அவசியம். கீறல்கள் அல்லது சேதம் ஏற்பட்ட விளக்குகளைத் தவிர்த்து, நல்ல நிலையில் உள்ள விளக்குகளைத் தேர்வு செய்து ஏற்ற வேண்டும்.

 

மாலை நேரத்தில் வாசலில் அழகான கோலமிட்டு, அதன் நடுவிலும் சுற்றுப்புறங்களிலும் விளக்குகளை வைக்கலாம். குறைந்தது 6 விளக்குகளுக்கு மேல் ஏற்றி, வீட்டின் அனைத்து திசைகளிலும் ஒளி பரவும் வகையில் தீபங்களை அலங்கரிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.

 

விளக்கேற்றிய பிறகு, வீட்டில் இயன்ற இனிப்பு மற்றும் பலகாரங்களை இறைவனுக்குப் படைத்து, தீபாராதனை செய்து வழிபட வேண்டும். பின்னர் படையலைப் பிரசாதமாக குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு பக்தியுடன் கார்த்திகை தீப வழிபாட்டை மேற்கொள்வது வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.