பாரம்பரிய சுவையில் முந்திரி கொத்து செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய செய்முறை!

பாரம்பரிய இனிப்பு வகைகளில் தனித்துவமான இடத்தைப் பெற்ற முந்திரி கொத்தை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். முதலில் பச்சைப்பயறை நன்றாக வறுத்து, ஆறியதும் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் எள், துருவிய தேங்காய் மற்றும் பாகு பதத்தில் தயாரித்த வெல்லக் கரைசலை சேர்த்து நன்றாகக் கலந்து சிறிய உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் 3 அல்லது 4 உருண்டைகளை ஒன்றாக இணைத்து கொத்து வடிவில் தயார் செய்ய வேண்டும். தனியாக பச்சரிசி மாவுடன் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவில் தயாரித்து வைத்துள்ள உருண்டைகளை முக்கி எடுத்து, சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான்! வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உள்ளே வெல்லம் மற்றும் தேங்காயின் இனிப்புச் சுவையுடனும் இருக்கும் பாரம்பரிய முந்திரி கொத்து தயார்.




கருத்துகள் (0)