வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
சமையல்

வீட்டிலேயே செய்யலாம் சத்தான வால்நட் ராகி சாக்லேட் கேக்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள்!

வீட்டிலேயே செய்யலாம் சத்தான வால்நட் ராகி சாக்லேட் கேக்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள்!

சாக்லேட் கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் ராகி மாவு, வால்நட், டார்க் சாக்லேட் ஆகியவற்றைச் சேர்த்து தயாரிக்கும் வால்நட் ராகி சாக்லேட் கேக் சுவையுடன் ஊட்டச்சத்துக்களும் நிறைந்ததாக இருக்கும். வீட்டிலேயே எளிய முறையில் இந்த கேக்கை எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாம்.

 

செய்முறை:

 

முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகச் சலித்துக் கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் நாட்டு சர்க்கரை, காபித்தூள், வினிகர், தயிர், எண்ணெய் மற்றும் வெனிலா எசன்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

 

பின்னர் இந்த ஈரப்பதமான கலவையை மாவுடன் சேர்த்து கட்டிகள் இல்லாமல் மெதுவாகக் கலக்க வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய வால்நட் மற்றும் துருவிய டார்க் சாக்லேட் சேர்த்து ஒரே சீராகக் கிளறிக் கொள்ள வேண்டும்.

 

தொடர்ந்து பட்டர் பேப்பர் விரிக்கப்பட்ட கேக் ட்ரேயில் தயாரித்த மாவை ஊற்ற வேண்டும். முன்கூட்டியே 10 நிமிடங்கள் சூடாக்கிய குக்கரில் கேக் ட்ரேயை வைத்து, மிதமான தீயில் சுமார் 45 நிமிடங்கள் வேகவிட வேண்டும். கேக் வெந்ததும் ஆறவைத்து துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.

 

சுவையான சாக்லேட் மணத்துடன், வால்நட்டின் மொறுமொறுப்பும் ராகியின் தனித்துவமான சுவையும் இணைந்த இந்த கேக்கை வீட்டிலேயே தயாரித்து குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.