திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு நீதிமன்ற உத்தரவை மதித்து செயல்பட வேண்டும் என 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
பக்தர்களின் மத நம்பிக்கைகளுடன் அரசு விளையாடக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் தேவையற்ற தலையீடுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தீபம் ஏற்றும் நிகழ்வு அமைதியாக நடைபெற அரசியல் கட்சிகள் மற்றும் மத அமைப்புகள் இந்த விவகாரத்தில் இருந்து விலகி நின்று வழிவிட வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.




கருத்துகள் (0)