தமிழக அஞ்சல் துறையில் 24 நிரந்தர ஓட்டுநர் பணியிடங்கள்! 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஸ்டாஃப் கார் டிரைவர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 24 காலிப் பணியிடங்கள் நிரந்தர அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அரசு துறையில் ஓட்டுநர் பணியில் சேர விரும்புவோருக்கு இந்த அறிவிப்பு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இலகுரக அல்லது தொடர்புடைய வாகனங்களை ஓட்டுவதற்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதுடன், குறைந்தது மூன்று ஆண்டுகள் வாகனம் ஓட்டிய அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி வயது தளர்வு தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 2026 நவம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் சென்றடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முன்பு பணியிடங்கள், தேவையான ஆவணங்கள், தேர்வு முறை மற்றும் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி உள்ளிட்ட முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.




கருத்துகள் (0)