வெள்ளி, நவம்பர் 06, 2026
உண்மையின் குரல்
வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேயில் 191 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு: பட்டதாரிகள் டிசம்பர் 6 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்திய ரயில்வேயில் 191 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு: பட்டதாரிகள் டிசம்பர் 6 வரை விண்ணப்பிக்கலாம்!

 

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 191 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தலைமை சட்ட உதவியாளர் (Chief Law Assistant), இளநிலை மொழிபெயர்ப்பாளர் (Junior Translator) உள்ளிட்ட முக்கியப் பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

பட்டதாரிகள் மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் தகுதியைப் பொறுத்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர் டிசம்பர் 6, 2026-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாகக் கவனிக்கவும்: ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி நாள் டிசம்பர் 4, 2026. விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் டிசம்பர் 6, 2026.

 

விண்ணப்பிக்கும் இணையதளம்: RRB அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.