தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று (அக். 11) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வானிலை நிலவரத்தைத் தொடர்ந்து கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




கருத்துகள் (0)