தூத்துக்குடி அருகே தனியார் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்; 4 பேர் படுகாயம்!

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே தனியார் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். காயல்பட்டினத்தில் இருந்து வைப்பாறு நோக்கிச் சென்ற ஆட்டோவும், அருப்புக்கோட்டையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த தனியார் பேருந்தும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் உட்பட மொத்தம் 4 பேர் பலத்த காயமடைந்தனர். மோதலின் வேகத்தில் இரு வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்து சேதமடைந்தன. விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தருவைகுளம் போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)