புதன், அக்டோபர் 14, 2026
உண்மையின் குரல்
அரசியல்

“தமிழகத்திற்குத் தேவையான கிருஷ்ணா நதிநீர் வழங்கப்படும்” – சந்திரபாபு நாயுடு உறுதி!

“தமிழகத்திற்குத் தேவையான கிருஷ்ணா நதிநீர் வழங்கப்படும்” – சந்திரபாபு நாயுடு உறுதி!

 

 

தமிழகத்தில் நீர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், சென்னையின் குடிநீர் தேவைக்காகத் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கிருஷ்ணா நதிநீரை ஆந்திர அரசு தொடர்ந்து வழங்கும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை சென்னைக்கு 4.08 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் விவகாரங்களில் மோதல்களை உருவாக்காமல், பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். நதிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் முரண்பாடுகளை விட ஒத்துழைப்பே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த உறுதிமொழி முக்கியத்துவம் பெறுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.