ஞாயிறு, நவம்பர் 22, 2026
உண்மையின் குரல்
அரசியல்

திருப்பரங்குன்றம் விவகாரம்.. மாணிக்கம் தாகூருக்கு அண்ணாமலை பதிலடி!

திருப்பரங்குன்றம் விவகாரம்.. மாணிக்கம் தாகூருக்கு அண்ணாமலை பதிலடி!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் முன்வைத்த விமர்சனங்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். திருப்பரங்குன்றத்திற்கு மாணிக்கம் தாகூர் எத்தனை முறை சென்றிருக்கிறார் எனக் கேள்வி எழுப்பிய அவர், முருகனை வழிபடுவது குறித்து தங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

 

தான் ஒவ்வொரு ஆண்டும் பழனி முருகனுக்கு காவடி எடுத்து வழிபடுவதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, முருகனை எப்படி வழிபட வேண்டும் என்பது தங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார்.

 

மேலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்த பிறகு மாணிக்கம் தாகூர் தங்களுக்கு அறிவுரை வழங்கலாம் எனவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே அரசியல் ரீதியான கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.