ஞாயிறு, நவம்பர் 22, 2026
உண்மையின் குரல்
அரசியல்

அதிமுகவில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி விலகல்.. தவெகவில் இணைய முடிவு!

அதிமுகவில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி விலகல்.. தவெகவில் இணைய முடிவு!

தென் சென்னை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர். கலைமுருகன், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் சென்னை பகுதியில் கட்சி நிர்வாகப் பொறுப்பில் இருந்த முக்கிய நிர்வாகி விலகுவது அதிமுகவுக்கு அரசியல் ரீதியாக பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

 

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் வட சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினரையும் தவெகவில் இணைத்து வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், தென் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு முக்கிய நிர்வாகியான ஆர். கலைமுருகனும் தவெகவில் இணைய முடிவு செய்திருப்பது அதிமுக வட்டாரத்தில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவது எடப்பாடி பழனிசாமிக்கு புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.