கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயம் விலை ஒரே நாளில் ரூ.50 குறைவு!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை திடீரென குறைந்துள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நேற்று முதல் தர சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.230-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.50 குறைந்து ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக சந்தைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் சமையலுக்குத் தேவையான வெங்காயத்தை வாங்குவதில் இல்லத்தரசிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், ஒரே நாளில் சின்ன வெங்காயத்தின் விலை கணிசமாக சரிந்திருப்பது குடும்பச் செலவுகளைச் சமாளிக்கும் பொதுமக்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.




கருத்துகள் (0)