முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு அமைச்சர் கீர்த்தனாவின் துறை மாற்றப்படுமா?

நவம்பர் 25ஆம் தேதி நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து, தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் இலாகா மாற்றப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தொழில்துறை தொடர்பான சில சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் காரணமாக இந்த மாற்றம் குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
'கைடன்ஸ் தமிழ்நாடு' அமைப்பு தொடர்பான தகவல்கள் ஆந்திராவுக்கு கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் மற்றும் அமைச்சர் தொடர்பான ரீல்ஸ் சர்ச்சை ஆகியவை தொழில்துறையின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவதற்கு காரணமாக அமைந்துள்ளன. இந்த விவகாரங்களை முன்வைத்து அரசுக்கு எதிராக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதன் பின்னணியில், அமைச்சர் கீர்த்தனாவை வேறு துறைக்கு மாற்றிவிட்டு, தொழில்துறையை நிர்வகிக்க அனுபவம் வாய்ந்த ஒருவரை நியமிக்க முதல்வர் விஜய் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அமைச்சரின் இலாகா மாற்றம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.




கருத்துகள் (0)