புதன், நவம்பர் 11, 2026
உண்மையின் குரல்
உலகம்

தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் 11 மாதக் குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்த தந்தை! அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் 11 மாதக் குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்த தந்தை! அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

 

அமெரிக்காவில் பெற்ற தந்தையே தனது 11 மாதக் குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக 25 வயதான மைக்கேல் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தன்று குழந்தையின் தாய் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த தந்தை மைக்கேல் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், வீட்டிற்கு வந்த குழந்தையைப் பராமரிக்கும் நபர், தந்தையையும் குழந்தையையும் காணாமல் சந்தேகமடைந்துள்ளார். இதையடுத்து இருவரையும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்.

அப்போது வீட்டின் அருகே தாத்தாவின் வீட்டுப் பகுதியில் தேடிப் பார்த்தபோது, துணியால் சுற்றப்பட்ட நிலையில் 11 மாதக் குழந்தை மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக குழந்தையை மீட்டு அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

நல்வாய்ப்பாக, குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், குழந்தையின் தந்தையான மைக்கேலைக் கைது செய்துள்ளனர். பெற்ற தந்தையே பச்சிளம் குழந்தைக்கு இத்தகைய கொடூரத்தைச் செய்ததாக வெளியாகியுள்ள தகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.