புதன், நவம்பர் 11, 2026
உண்மையின் குரல்
உலகம்

சவுதியில் திருமணத்திற்கு புறம்பான உறவு குற்றச்சாட்டில் கென்ய பெண்ணுக்கு 100 கசையடிகள் தண்டனை!

சவுதியில் திருமணத்திற்கு புறம்பான உறவு குற்றச்சாட்டில் கென்ய பெண்ணுக்கு 100 கசையடிகள் தண்டனை!

 

சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த கென்யாவைச் சேர்ந்த எஸ்தர் வஞ்சிரு முதோனி என்ற பெண்ணுக்கு, திருமணத்திற்கு புறம்பான உறவின் மூலம் குழந்தை பெற்றெடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் 100 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஷரியா சட்டத்தின் கீழ் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எஸ்தர், எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், இந்த உறவின் மூலம் 2025ஆம் ஆண்டு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பிரசவத்தின்போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அதன் தொடர்ச்சியாக அவருக்கு 100 கசையடிகள் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.