புதன், அக்டோபர் 14, 2026
உண்மையின் குரல்
இந்தியா

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாளை போராட்டம்! இந்தியா கூட்டணியுடன் தவெகவும் பங்கேற்பு!

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாளை போராட்டம்! இந்தியா கூட்டணியுடன் தவெகவும் பங்கேற்பு!

 

 

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் கண்டித்து, இந்தியா கூட்டணி சார்பில் நாளை (அக்.14) சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க உள்ளனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி சார்ந்த போராட்டத்தில் தவெக தரப்பிலிருந்து ஒருவர் பங்கேற்பது இதுவே முதல்முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.