ஞாயிறு, நவம்பர் 15, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

விருதுநகரில் வீட்டில் தனியாக இருந்த 65 வயது பெண் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு.. 9 சவரன் நகை மாயம்!

விருதுநகரில் வீட்டில் தனியாக இருந்த 65 வயது பெண் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு.. 9 சவரன் நகை மாயம்!

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.வி.பி.என்.எஸ். காலனியில், வீட்டில் தனியாக வசித்து வந்த 65 வயதான ஜோதிராணி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகேந்திரனின் மனைவியான இவர், இன்று காலை தனது வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர்.

 

இதற்கிடையே, ஜோதிராணி அணிந்திருந்த 9 சவரன் மதிப்பிலான தங்கச் செயின் மற்றும் கம்மல் ஆகியவை காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் நகைகளைத் திருடும் நோக்கில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் மோப்ப நாயை வரவழைத்தும், கைரேகை நிபுணர்கள் உதவியுடனும் வீட்டில் உள்ள தடயங்களைச் சேகரித்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.