திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உடன்பாடு இல்லை என திருமாவளவன் விளக்கம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள அளவைக்கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு மீது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே கட்சியின் நிலைப்பாடு என்றும் அவர் கூறியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்த முயற்சிக்கும் சூழலில், தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற கருத்தையே தான் முன்வைத்ததாக திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
தனது அறிக்கை தீபம் ஏற்றுவதற்கு ஆதரவளிப்பது போன்ற பொருளில் வெளிப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது கருத்தின் உண்மையான நோக்கம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை ஏற்கவில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.




கருத்துகள் (0)