சனி, நவம்பர் 21, 2026
உண்மையின் குரல்
அரசியல்

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை.. ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு!

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை.. ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு!

ராஜஸ்தானில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பாஜகவை விட காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. 41 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில், தற்போது வெளியாகி வரும் முடிவுகள் மாநில அரசியலில் கவனம் பெற்றுள்ளன.

 

இதுவரை 37 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 25 மாவட்ட ஊராட்சிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. ஆளும் பாஜக 8 மாவட்ட ஊராட்சிகளில் மட்டுமே முன்னிலையில் இருப்பதாக தேர்தல் நிலவரம் தெரிவிக்கிறது.

 

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள 419 ஊராட்சி ஒன்றியங்களில் காங்கிரஸ் 213 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 85 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இந்த முடிவுகள் ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஊரகப் பகுதிகளில் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.