சனி, நவம்பர் 21, 2026
உண்மையின் குரல்
அரசியல்

விஎஸ் பாபு இறுதிச்சடங்கில் விஜய்யின் செயல் பாசம் என்றால் கரூர் உயிரிழப்பிலும் காட்டியிருக்க வேண்டும் – உதயகுமார் விமர்சனம்!

விஎஸ் பாபு இறுதிச்சடங்கில் விஜய்யின் செயல் பாசம் என்றால் கரூர் உயிரிழப்பிலும் காட்டியிருக்க வேண்டும் – உதயகுமார் விமர்சனம்!

விஎஸ் பாபுவின் இறுதிச்சடங்கில் காலணியின்றி அவரது உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய்யின் செயல் வேஷமல்ல, உண்மையான பாசம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இருப்பினும், இதே மனிதநேயத்தையும் அக்கறையையும் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரிடமும் காட்டியிருக்க வேண்டும் என அவர் விமர்சித்துள்ளார்.

 

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தால், விஜய்யின் இந்த செயல் மக்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றிருக்கும் என்றும் உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், கரூர் சம்பவத்திற்குப் பிறகு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்காமல் 72 நாட்கள் வீட்டிலேயே இருந்ததாக விஜய்யை குற்றம்சாட்டிய அவர், அனைவரிடமும் ஒரே மாதிரியான மனிதநேயத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.