உடல் எடையைக் குறைக்க உதவும் பச்சை பட்டாணி.. எப்படி சாப்பிட வேண்டும்!

நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த பச்சை பட்டாணி, உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புவோருக்கு ஏற்ற உணவாக இருக்கலாம். இதனை உணவில் சேர்த்துக்கொள்வதால் நீண்ட நேரம் பசியின்றி வயிறு நிறைந்த உணர்வு கிடைக்க உதவுகிறது. இதன் மூலம் அடிக்கடி உணவு சாப்பிடுவது மற்றும் தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்வதை கட்டுப்படுத்த முடியும்.
குறைந்த கலோரி அளவுடன் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள பச்சை பட்டாணி, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாக அமையக்கூடும். இருப்பினும், பச்சை பட்டாணியை மட்டும் சாப்பிடுவதால் உடல் எடை குறைந்துவிடும் என்று கருதக்கூடாது.
சீரான உணவுமுறை, கலோரி அளவில் கட்டுப்பாடு, தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஆகியவற்றுடன் பச்சை பட்டாணியை சேர்த்துக்கொள்ளும்போது, உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.




கருத்துகள் (0)