நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.16 குறைப்பு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழியின் பண்ணைக் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16 குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.116-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி, தற்போது ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு காரணமாக கோழிப் பண்ணையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பல்லடத்தில் நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விலை நிர்ணயம் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து நாமக்கல் மண்டலத்தைச் சேர்ந்த நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கறிக்கோழியின் பண்ணைக் கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
கறிக்கோழி விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், முட்டைக்கோழியின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முட்டைக்கோழி தொடர்ந்து ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பழைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருவதாகப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.




கருத்துகள் (0)